|
| என்எல்சி ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சு நீடிப்பு! |
| சென்னை (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008 ( 09:41 IST ) | |
பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் என்.எல். சி. ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று காலை மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
ஊழியர்கள் நியமனம், பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.எல்.சி நிறுவனத்தின் தொழிற்சங்கங்களான பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியவை நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தன.
எனினும், சென்னையில் உள்ள என்.எல்.சி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க பிரதிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், மீண்டும் நடந்த பேச்சு வார்த்தை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் செல்வராஜ் அறிவித்தார். இதனால் இன்று காலை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
இதற்கிடையே, இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்குகிறது. இதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்தே, தொழிற்சங்கத்தினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தெரியவரும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|