|
| அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு: ராசா மறுப்பு
|
| சென்னை (ஏஜென்சி), 10 அக்டோபர் 2008 ( 17:14 IST ) | |
'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை' என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 9 மாதங்களாக மத்திய அமைச்சரவையில் காபினட் அமைச்சராக பணியாற்றி வரும் என் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் சமீபகாலமாக என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. சன் டி.வி.யும், தினகரன் நாளிதழும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றன. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனே காரணம்.
2ஜி அலைவரிசையை பொருத்தவரை, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் அதற்கான உரிமம் மற்றும் ஒதுக்கீடு ஆகியவை, வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிமக் கட்டணமாக ரூ.9 ஆயிரம் கோடி, வருவாயில் பங்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடி ஆண்டுதோறும் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 ஆயிரத்து 800 கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தற்போது 4 புதிய நிறுவனங்களுக்கு அலைவரிசை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
ஏல விற்பனை மூலம் ஒரே நேரத்தில் கிடைக்கும் வருவாய் குறைவானதே. ஆனால் தற்போது வருவாயில் பங்கு மூலம் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து வருகிறது. இந்த அடிப்படையில் 2ஜி அலை வரிசையை ஒதுக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.
தகுதி அடிப்படையில் மத்திய அமைச்சரவை, டிராய் மற்றும் டெலிகாம் கமிஷன் ஆகியவற்றின் ஒப்புதலோடு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் எந்த விதிமீறலோ, சட்ட மீறல்களோ இல்லை. இது தொடர்பாக, எந்த விசாரணைக்கும் நான் தயார்.
3ஜி அலைவரிசையை பொருத்தவரை, அதன் உபயோகிப்பாளர்கள் உயர் வருவாய் பிரிவினர்கள் என்பதால் அந்த அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவை அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு டிசம்பரில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கும், தைப்பொங்கல் தினத்தில் சென்னையில் முதல்வர் கருணாநிதியும் இந்த 3ஜி அலை வரிசை சேவையை தொடங்கி வைக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|