யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சர்ச்சுகளை தாக்கினால் குண்டர் சட்டம்: டி.ஜி.பி.
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 16:35 IST )
தமிழகத்தில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று காவல்துறை டிஜிபி கே.பி. ஜெயின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரிசா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வண்ணம் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும், திருவிழாக்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், மாநிலத்தின் சில இடஙகளில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி 22 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அனைத்துக் கட்சி கூட்டம் : மதிமுகவும் புறக்கணிப்பு
இலங்கை பிரச்சனையில் உறுதியான தீர்மானம் தேவை: ராமதாஸ்
மின்வெட்டு: திருச்சியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழர் பிரச்சனை :மறியலில் ஈடுபட்ட வைகோ கைது
2 புதிய மின்திட்டம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் : ஜெ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...