யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அனைத்துக் கட்சி கூட்டம் : மதிமுகவும் புறக்கணிப்பு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 16:32 IST )
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காகவரும் 14ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுகவும் ங்கேற்காது என வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், அதனை அதிமுக புறக்கணிக்கும் என்றும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவரைப்பின்பற்றி மதிமுகவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து இன்று சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தொண்டர்களிடையே வைகோ பேசியதாவது:

ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக தந்தி கொடுக்கும்படி முதலமைச்சர் கருணாநிதி அவருக்கே உரித்தான ஜெகஜ்ஜால பாணியில் அறிக்கை விடுகிறார்.

கேட்ட இலாகாவை கொடுக்காவிட்டால் மந்திரி பதவி ஏற்க மாட்டோமென்று மிரட்டல் விடுத்த அவருக்கு மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடா விட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம்
என்று மிரட்டாதது ஏன்?

அனைத்து கட்சி கூட்டத்தை நடத்து வோம் என்ற நாடகத்திற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.

மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்து வருகிறது.இதனை தடுத்து நிறுத்தும் படி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதில் இந்தியா வழங்கிய ராடார் கருவி களை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதற்கு பிரதமர் அளித்த பதில் கடிதத்தில் தமிழர்களுக்கு எதிராக ராடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வ தாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தொடர்ந்து இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.

அங்குள்ள தமிழர்களுக்கு மருந்து பொருட்கள், உணவு ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கேட் டோம். ஆனால் 18 மாதங்களாகியும் இதுவரை அனுமதி தரப்படவில்லை.

இதனை தடுத்து நிறுத்தியதில் முக்கிய காரணம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தான். இதனை அறுதியிட்டு குற்றஞ்சாட்டு வேன். ஈழத் தமிழர் படுகொலைக்கு முக்கிய காரணம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் தான் என்றார் வைகோ.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை பிரச்சனையில் உறுதியான தீர்மானம் தேவை: ராமதாஸ்
மின்வெட்டு: திருச்சியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழர் பிரச்சனை :மறியலில் ஈடுபட்ட வைகோ கைது
2 புதிய மின்திட்டம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் : ஜெ.
மின்வெட்டை கண்டித்து 20,000 விசைத்தறி மூடல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...