|
| இலங்கை பிரச்சனையில் உறுதியான தீர்மானம் தேவை: ராமதாஸ் |
| திண்டிவனம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 16:27 IST ) | |
"இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிப்பதற்காக நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து உறுதியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வரும் 14ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்ய வேண்டும். இதை ஓர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசு செயல்படுத்துவதற்கான ஏற்பாடுளையும் நாம் செய்ய வேண்டும்.
இலங்கையில் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு இந்தியாவின் மேற்பார்வையில் அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை கடைபிடித்து வந்த வெளியுறவு கொள்கையில் மாற்றம் வேண்டும். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் ஒருமித்த குரல் எழுப்பப்பட வேண்டும்.
இலங்கை ராணுவத்திற்கு செய்துவரும் மறைமுக உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இந்த அங்கீகாரத்தின் மூலம் அமையப்போவது தனி நாடா அல்லது சுயாட்சி உரிமையா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும்.
இதற்காக தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|