யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மின்வெட்டு: திருச்சியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 16:25 IST )
திருச்சியில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து ஜெயலலிதா பேரவை சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி புறநகர் மாவட்டம், மருங்காபுரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மின்சாரம் வரும் நேரத்தை விட மின்சாரம் போகும் நேரம் அதிகமாக உள்ளது.

இதனால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் அனைத்து பயிர்களும் கருகும் நிலையில் உள்ளன.

டீசல் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களைகூட பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் வணிகர்கள், சிறுதொழில் புரிவோர் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த கடுமையான மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் மாவட்ட அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் நாளை மருங்காபுரி துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை தமிழர் பிரச்சனை :மறியலில் ஈடுபட்ட வைகோ கைது
2 புதிய மின்திட்டம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் : ஜெ.
மின்வெட்டை கண்டித்து 20,000 விசைத்தறி மூடல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம்
நெல்லையில் மின்னல் தாக்கி 3 பேர் பலி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...