யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை தமிழர் பிரச்சனை :மறியலில் ஈடுபட்ட வைகோ கைது
சென்னை(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 16:09 IST )
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து இன்று சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும்,இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி இன்று காலை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னர்ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் திரண்டனர்.அவர்கள் அனைவரும் மறியலில் ஈடுபடுவதற்காக சாஸ்திரிபவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவு செய்திருந்தனர்.

ஆனால் இந்த மறியல் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்க வில்லை என்பதால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட மதிமுக முடிவு செய்தது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை, ஸ்பீக்கர், மைக் போன்றவைகளை போலீசார் அப்புறப்படுத்தியதால் போலீசாருடன் வைகோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் போலீசார் தற்காலிகமாக இணைப்பு கொடுத்த மைக்கில் பேசினார்.

அதன்பின் வைகோ, மதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வைகோ தலைமையில் அணி, அணியாக தடையை மீறி மறியலுக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் வைகோ உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே அதிமுக சார்பில் அமைப்பு செயலாளர் முத்துசாமி, இந்த போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பேசினார்கள்



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
2 புதிய மின்திட்டம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் : ஜெ.
மின்வெட்டை கண்டித்து 20,000 விசைத்தறி மூடல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம்
நெல்லையில் மின்னல் தாக்கி 3 பேர் பலி!
மத மோதல்களில் சந்தர்ப்பவாதம் வேண்டாம்: விஜயகாந்த்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...