|
| 2 புதிய மின்திட்டம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்! |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 15:51 IST ) | |
தமிழகத்தில் ரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 2 புதிய மின் திட்டங்கள் அமைக்க முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் மத்திய அரசின் கிராமப்புற மின்வசதி கழகத்தின் நிதியுதவியுடன் வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்கம் மற்றும் நெய்வேலி நிலக்கரி கழகத்துடன் இணைந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு தீர்வு காணும் வகையில், 2008-09ம் ஆண்டில் ரூ.7 ஆயிரத்து 627 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 பெரிய மின் திட்டங்களை நிர்மாணிக்க ஆவன செய்து வருகிறது.
அதோடு, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி அனல்மின் நிலையமும் இணைந்து ரூ.4 ஆயிரத்து 909 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடும் 2 மின் திட்டங்களை அமைக்க, கிராமப்புற மின்வசதிக் கழகம் ரூ.3 ஆயிரத்து 437 கோடி கடனுதவி வழங்குகிறது.
வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தில் தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2 ஆயிரத்து 718 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடும் 2ம் பிரிவை அமைக்கவும், ரூ.2 ஆயிரத்து 175 கோடி கிராமப்புற மின் வசதிக் கழகம் இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.5,612 கோடி கடனுதவி வழங்குகிறது.
இந்த திட்டங்களுக்காக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கிராமப்புற மின்வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பி.உமா சங்கர், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் எஸ். மச்சேந்திரநாதன், நெய்வேலி நிலக்கரி கழகத்தின் தலைவர் ஜே.என்.பிரசன்னகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இவை தவிர ரூ.3 ஆயிரத்து 340 கோடி மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களால் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புதல் மற்றும் பகிர்ந்து வழங்குதல் ஆகியவற்றுக்கான பெரிய மின்திட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
இதற்காக தமிழக மின் வாரியத்துக்கு கிராமப்புற மின்வசதிக் கழகம் இந்த ஆண்டில் ஏற்கனவே ரூ.3 ஆயிரத்து 113 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.
இத்திட்டங்கள் மூலம் 9 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதோடு, தமிழகத்தில் அதிகரித்துவரும் மின் தேவைகள் நிரந்தரமாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|