யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் : ஜெ.
சென்னை(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 15:39 IST )
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள னைத்துக்கட்சி கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், அதனை திமுக புறக்கணிக்கும் என்றும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம், வரும் 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள வரும்படி முதல்வர் கருணாநிதி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் தமது கட்சி புறக்கணிக்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அப்படிச் செய்தால் தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும்.அதை விட்டு விட்டு, அனைத்துக் கட்சிக்கூட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்.இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

எனவே, இந்தக் கண்துடைப்பு நாடகமான அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின்வெட்டை கண்டித்து 20,000 விசைத்தறி மூடல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம்
நெல்லையில் மின்னல் தாக்கி 3 பேர் பலி!
மத மோதல்களில் சந்தர்ப்பவாதம் வேண்டாம்: விஜயகாந்த்
இன்று முதல் ஆறரை மணி நேரம் மின் வெட்டு
இலங்கை பிரச்னை: செப். 14ல் அனைத்துக் கட்சி கூட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...