|
| ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம் |
| திருச்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 14:48 IST ) | |
இலங்கையில் தமிழர் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் இன்று காலை வழக்கம்போல் கைதிகளுக்கு உணவு பறிமாறப்பட்டது. அப்போது கைதிகளின் ஒரு பிரிவினர் உணவை வாங்க மறுத்து விட்டனர்.
பொன்பரப்பி ராஜேந்திரன் என்பவர் தலைமையில் சுமார் ஆயிரம் கைதிகள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக அப்போது தெரிவித்தனர்.
அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக சிறைக் கைதிகள் தெரிவித்தனர்.
தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, திமுகவினர் பிரதமருக்கு ஆயிரக்கணக்கான தந்திகளை அனுப்பினர்.
இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|