யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நெல்லையில் மின்னல் தாக்கி 3 பேர் பலி!
நெல்லை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008   ( 10:27 IST )
நெல்லை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

நெல்லை மாவட்டம் அம்பாமுத்திரம், கடையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியதால் வாழைகள் முறிந்து விழுந்தன.

கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பைப் பகுதியை விவசாயி சுப்பிரமணியன் (48) என்பவர் மழை பெய்ததும் ஓர் ஓலைக் கொட்டகையின் கீழ் நின்று கொண்டிருந்தார். அப்போது, கொட்டகை மீது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார்.

சுத்தமல்லி அடுத்துள்ள பாடகசாலையைச் சேர்ந்த மகராசி (27) என்பவர் நேற்று வயலில் வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவரும் பலியானார்.

அதேபோன்று, முக்கூடல் அருகேயுள்ள கலிதீர்த்தான் பட்டியை சேர்ந்த புஷ்பம் (52) என்பவரும் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத மோதல்களில் சந்தர்ப்பவாதம் வேண்டாம்: விஜயகாந்த்
இன்று முதல் ஆறரை மணி நேரம் மின் வெட்டு
இலங்கை பிரச்னை: செப். 14ல் அனைத்துக் கட்சி கூட்டம்
நாம‌க்க‌‌ல்‌லி‌ல் தடு‌ப்பூ‌சி போட்ட 10 மாத குழ‌ந்தை ப‌லி!
இல‌ங்கை ‌பி‌‌‌ர‌ச்‌சினையில் க‌ட்‌சிக‌ள் ஓர‌ணி‌யி‌ல் ‌திரள கருணா‌நி‌தி வேண்டுகோள்
பிரதமருக்கு தந்தி : திருமாவளவன் வேண்டுகோள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...