|
| மத மோதல்களில் சந்தர்ப்பவாதம் வேண்டாம்: விஜயகாந்த் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 10:15 IST ) | |
மத மோதல் தொடர்பான பிரச்னைகளில் அரசு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தக்கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதும், கிறிஸ்துவ மக்கள் தாக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது.
ஒரிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சிறு தீப்பொறியாக இருந்த கலவரம் தற்போது பெரும் தீயாக மாறியுள்ளது.
இதுபோன்ற மதக்கலவரங்களை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒரு தரப்பினரை ஆதரித்தால், மற்ற தரப்பினரின் ஓட்டுகள் போய்விடும் என்று அரசு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தக்கூடாது. யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அப்போது தான், நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படும்.
சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|