|
| இன்று முதல் ஆறரை மணி நேரம் மின் வெட்டு |
| சென்னை (எஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 10:05 IST ) | |
சென்னை நகரைத் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் ஆறரை மணி நேரம் மின் வெட்டு அமலுக்கு வருகிறது. தொழிற்சாலைகளில் இது 8 மணி நேரமாக அமல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த சில மாதங்களாக மின் வெட்டு அமலில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், அதிகாரபூர்வ மின்வெட்டை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. மின் தட்டுப்பாடு ஓரளவு சரியானதை அடுத்து செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மின் வெட்டு ஓரளவு தளர்த்தப்பட்டது.
ஆனால் மழை பொய்த்தது, காற்றாலை மூலம் மின் உற்பத்தி குறைந்தது போன்ற காரணங்களால் அடுத்த சில தினங்களிலேயே மின் வெட்டு மீண்டும் தொடர்ந்தது. இதன்படி சென்னை நகரில் ஒன்றைரை மணி நேரமும், மற்ற இடங்களில் 5 மணி நேரமும் வெட்டு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் மின் வெட்டு ஆறரை மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. இதன்படி பகலில் 4 மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் மின்சாரம் இருக்காது.
எனினும் சென்னை நகரைப் பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை. ஒன்றைரை மணி நேரம் மட்டுமே மின் வெட்டு அமலில் இருக்கும். தொழிற்சாலைகளில் 8 மணி நேரம் கட்டாய மின் வெட்டு அமல் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அந்தந்த பகுதி மின் வாரிய மேற்பொறியாளர்கள் வாயிலாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|