|
| இலங்கை பிரச்னை: செப். 14ல் அனைத்துக் கட்சி கூட்டம் |
| சென்னை (ஏஜென்சி), 10 அக்டோபர் 2008 ( 09:05 IST ) | |
இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 14ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புக்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்தவும், அங்கு நிரந்தர அமைதி ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு முன்வரவேண்டும்.
இதை வலியுறுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம், வரும் 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள வரும்படி முதல்வர் கருணாநிதி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|