யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பிரதமருக்கு தந்தி : திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008   ( 18:28 IST )
இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த ந்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் ன்மோகன் சிங்கிற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்று தமது கட்சியினரை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எப்போதுமில்லாத வகையில் தமிழ் ஈழத்தில் உள்ள அப்பாவித் தமிழர்களை பூண்டோடு அழித்தொழிக்கும் நோக்கத்தோடு சிங்கள அரசு தனது ராணுவத்தை அணியமாக்கி வருகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சிங்கள அரசுக்கு இந்திய அரசு தகுந்த அழுத்தங்களைக் கொடுத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு தந்திகள் அனுப்பும்படி தமிழக முதல்வர் அறிவித்ததை விடுதலைச்சிறுத்தைகளும் வரவேற்றுப் பாராட்டியதுடன் விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலும் தந்திகள் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தோம்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் இந்தியத் தலைமை அமைச்சருக்கு தந்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

சென்னையில் வடபழனி, தந்தி அலுவலகத்திலிருந்து 8.10.2008 ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகள் இந்தியத் தலைமை அமைச்சருக்கு தந்திகள் அனுப்பினர்.

இதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் ஆங் காங்கே உள்ள மாவட்ட, மாநில நிர்வாகிகளும் அனைத்து விடுதலைச்சிறுத்தைகளும் இந்தியத் தலைமை அமைச்சருக்கு தந்திகள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் திருமாவளவன்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின்வெட்டு:விழுப்புரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ராஜ பக்சேவை மன்மோகன் வலியுறுத்த வேண்டும் : ஜெ.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
ஆள் கடத்தல்: என்கேகேபி ராஜா உரையாடல் சிடி வெளியீடு
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: பா.ம.க.
'பிரபாகரனை நாடு கடத்த இந்தியா கோரிக்கை'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...