|
| மின்வெட்டு:விழுப்புரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் |
| விழுப்புரம்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 18:22 IST ) | |
தொடர் மின்வெட்டை கண்டித்து விழுப்புரத்தில் இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரத்தில் நடைபெறும் தொடர் மின்வெட்டை கண்டித்து தமது கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக பேரவை செயலாளருமான தளவாய் சுந்தரம் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|