|
| ராஜ பக்சேவை மன்மோகன் வலியுறுத்த வேண்டும் : ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 14:21 IST ) | |
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கருணாநிதி கூறியபடி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புவதால் எத்தகைய பயனுமில்லை என்று கூறியுள்ள ஜெயலிதா, இலங்கை அதிபர் ராஜ பக்சேவை, மன்மோகனே நேரில் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :
இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர் கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினேன்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும், அதிமுக வின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம்; ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கர வாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம்.
தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத் திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. பயங்கரவாதச் செயல்களை, ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல் களால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கும், பொது ஒழுங்கும், அமைதியும், இறையாண்மையும் சீர்குலை வதை ஒரு நாளும் ஏற்க முடியாது. தமிழ் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க கருணாநிதி பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தான் நான் கேட்டேன்.
நான் இப்படி வலியுறுத்திக் கூறியதால், "பிரதமருக்கு எல்லோரும் தந்தி அனுப்புங்கள்'' என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. இந்த அறிவிப்பு மக்களிடம் எடுபடவில்லை, அவ்வாறு செய்ய மக்கள் தயாராக இல்லை என்பது தெரிந்ததும், மத்திய கூட்டணி அரசை விட்டே வெளியேறுவோம், அதைப்பற்றியும் யோசிப்போம் என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இடம் பெயர்ந்து, வசிக்க இடமில்லாமல், அவர்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ண உணவு, தங்க இருப்பிடம், மருந்து ஆகி யவை இல்லாமல் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை ராணுவத்தின் உக்கிரத் தாக்குதலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட ஆளாக்கப்பட் டிருக்கிறார்கள். பல மாதங்களாக இந்த நிலைமை தான் இலங்கையில் நிலவுகிறது.
தந்திகள் அனுப்புவதனாலோ, அல்லது இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதனாலோ, பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக் கான தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள வர்களுக்கு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் குறித்து எள்ளளவாவது கவலை இருக்க வேண்டாமா?
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறி உள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|