யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம் (ஏஜென்சி), 9 அக்டோபர் 2008   ( 13:55 IST )
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி விட்ட நிலையில்,தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இந்தியா தரப்பில் பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அதனை இலங்கை அலட்சியப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசியில் பேசியபோது கூட இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள இலங்கை தூதரை மத்திய அரசு அழைத்து, இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஆகியவற்றை உடனடியா நிறுத்த வேண்டும் என கண்டிப்புடன் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்திய அரசின் இந்த எச்சரிக்கையை இலங்கை கொஞ்சமும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.வழக்கம்போல் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாக் ஜலசந்தியில் இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 60 பேர் 15 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடியே இந்திய மீனவர்களின் படகுகளுக்குள் புகுந்து அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் இதர பொருட்களையும் கடலில் அள்ளி வீசினர். மேலும் மீன் வலைகளையும் அறுத்தெறிந்து கடலில் வீசினர்.

மேலும் மீனவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்து அவர்களை கடலில் பிடித்து தள்ளினர்.இதனால் மீனவர்கள் பல மணி நேரம் தண்ணீரில் நீந்தியபடியே கடலில் தவித்தனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்களிடையே இன்று கடும் கொந்தளிப்பு காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜ பக்சேவை மன்மோகன் வலியுறுத்த வேண்டும் : ஜெ.
ஆள் கடத்தல்: என்கேகேபி ராஜா உரையாடல் சிடி வெளியீடு
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: பா.ம.க.
'பிரபாகரனை நாடு கடத்த இந்தியா கோரிக்கை'
என்.எல்.சி. ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்?
கத்திவாக்கம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஜெ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...