யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஆள் கடத்தல்: என்கேகேபி ராஜா உரையாடல் சிடி வெளியீடு
ஈரோடு (ஏஜென்சி), 9 அக்டோபர் 2008   ( 13:41 IST )
முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா மீதான ஆள் கடத்தல் புகாரில், கடத்தப்பட்ட சிவபாலனுடன் ராஜா பேசிய தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடி வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி-மலர்விழி தம்பதி மற்றும் அவர்களது மகன் சிவபாலன், உறவினர் குகமணி ஆகியோரை, முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா ஆதரவாளர்கள் கடத்தியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆள் கொணர்வு மனுவுக்கு பின்னர், பழனிச்சாமி, மலர்விழி தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகி, அமைச்சர் ராஜாவின் தூண்டுதலின்பேரில் அவரது ஆட்கள் தங்களை கடத்தியதாக புகார் கூறினர்.

தங்களது சொத்து அபகரிப்பதற்காக இந்த கடத்தல் நடந்ததாகவும், தங்களது மகன் சிவபாலன் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து, மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்தனர்.

ந்த விவகாரத்தால் ராஜாவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் பெருந்துறைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜா மீதான ஆள் கடத்தல் வழக்கில் மற்றொரு அதிர்ச்சி திருப்பமாக, கடத்தப்பட்ட சிவபாலனுக்கும், ராஜாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை குகமணி வெளியிட்டுள்ளார்.

அந்த சிடியில் சிவபாலனிடம் ராஜா பேசுவது பதிவாகியுள்ளது. இந்த சிடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: பா.ம.க.
'பிரபாகரனை நாடு கடத்த இந்தியா கோரிக்கை'
என்.எல்.சி. ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்?
கத்திவாக்கம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஜெ.
ஆயுதபூஜை: இன்று கோலாகல கொண்டாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...