|
| கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: பா.ம.க. |
| காரைக்குடி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 12:54 IST ) | |
கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் மின்தடை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தட்டுப்பாட்டை போக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தேர்தல் நேரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஆகியவற்றை கூட்டி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|