|
| 'பிரபாகரனை நாடு கடத்த இந்தியா கோரிக்கை' |
| சென்னை(ஏஜென்சி), 9 அக்டோபர் 2008 ( 11:19 IST ) | |
நாளை நடைபெற உள்ள சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கூட்டத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கையை எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும், அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்கள் ஆவர்.
அவர்கள் இருவரையும் நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்துள்ளது.
ஏற்கனவே வியன்னா போய் சேர்ந்துள்ள சிபிஐ இயக்குனர் இதுதொடர்பான முறையான கோரிக்கையை முன் வைக்கவுள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவானது வரவேற்கத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங்கின் மற்றுமொரு உறுதிப்பாடான நடவடிக்கை இது.
ராஜீவ் கொலை சதி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ பல்நோக்கு குழுவின் விசாரணையில் சந்தேகிக்கப்படும் முதலமைச்சர் கருணாநிதிதான் இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சுப்பிரமணிய சாமி.
இதனிடையே நேற்று நடைபெற்ற மேற்கூறிய கூட்டத்தில் பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஐ எழுப்பியதா இல்லையா என்பது குறித்த தகவல் ஏதுமில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|