|
| இலங்கை தமிழர் பிரச்னை: ராமதாஸ் கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008 ( 12:24 IST ) | |
'இலங்கை தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி நெருக்கடி கொடுக்க வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான படுகொலையை அதிபர் ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு தூங்கி கொண்டிருக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார். போரை நிறுத்த வேண்டும், அமைதி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்த அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது தான். ஆனால் இவை மட்டும் போதாது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகும், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வரும், அவரது தலைமையிலான தமிழக அரசும் நேரடியாக பிரதமருடனும், வெளியுறவுத்துறை அமைச்சருடனும் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உடனே தலையிட்டு அந்நாட்டு அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இலங்கையில் இனி போர் முழக்கங்கள் கேட்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும்படி அந்நாட்டு அதிபருக்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்கும்படி முதல்வர் கருணாநிதி நெருக்கடி கொடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் நேரடியாக டெல்லிக்கு சென்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து செல்ல வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத ஒற்றுமை இப்போது, தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது. இதை முதல்வர் கருணாநிதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|