|
| ஈழப் பிரச்னை: பிரதமருக்கு தந்தி அனுப்ப முதல்வர் கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2008 ( 14:57 IST ) | |
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி, பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இடைவிடாது நடக்கும் ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல், இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
'இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்' என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|