|
| இலங்கையுடன் கூட்டு ரோந்து வேண்டாம் : கருணாநிதி |
| சென்னை(ஏஜென்சி), 4 அக்டோபர் 2008 ( 15:28 IST ) | |
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை ரோந்து தேவை இல்லை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகல ஹாமாவும் அண்மையில் சந்தித்துப் பேசியபோது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதை தடுக்கவும் இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,இதே கருத்தை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூட்டு கடற்படை ரோந்து தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படை யினருக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
கூட்டு கடற்படை ரோந்து என்பது ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிராகரிக் கப்பட்ட ஒன்று.
அந்த காரணங்கள் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அப்போ தைய தலைமை செயலாளரும் மாநில அரசு அதிகாரிகளும் விரிவான ஆலோசனைகள் நடத்தியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போது இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு நவீன கருவிகள், மற்றும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
உடனடியாக இதை செய்து கொடுத்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் இப்போதைய சூழ்நிலையில் கூட்டு கடற் படை ரோந்து தேவை இல்லை. இலங்கை அரசு தெரிவித்த இருக்கும் கூட்டு கடற்படை திட்டம் பற்றி பரிசீலிக்க வேண்டிய அவசிய மும் இல்லை என அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|