|
| இலங்கை தமிழர் பிரச்னை: திருமா போராட்ட அறிவிப்பு
|
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 4 அக்டோபர் 2008 ( 10:51 IST ) | |
'இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, மத்திய அரசு கூட்டு நடவடிக்கை மேற்கொண்டால் தமிழக மீனவர்களை ஒன்று திரட்டி நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வது, வலைகளை அறுத்து சேதப்படுத்துவது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து அட்டூழியம் செய்துவருவதை இந்திய கடற்படை இத்தனை காலமும் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
ஆனால், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித் பொகல்லகாம- மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் சந்திப்புக்கு பின்னர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இந்திய-இலங்கை கடற்படையின் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்திய அரசும், உலகின் 3-வது பெரிய ராணுவம் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்திய ராணுவமும் இலங்கை கடற்படையை அடக்க திராணியற்று, இந்த கூட்டு நடவடிக்கைக்கான அறிவிப்பை செய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய தலைகுனிவு.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது சிங்கள கடற்படைதான் என்பது உலகம் அறிந்த ஒன்று. இந்நிலையில் இந்த கூட்டு நடவடிக்கை ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அழித்தொழிப்பதற்கே பயன்படும்.
எனவே, இந்திய அரசு உடனடியாக இந்த கூட்டு நடவடிக்கை அறிவிப்பை கைவிட வேண்டும். இல்லையெனில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|