யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மின்வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ்!
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 4 அக்டோபர் 2008   ( 10:42 IST )
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழக மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து எரிசக்தித் துறை செயலர், மின் வாரியத் தலைவர், மின் வாரிய செயலாண்மை இயக்குனர், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மின் வாரியத்தின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்முடிவு செய்யப்பட்டது.

இதில், 8.33 சதவீதம் போனசாகவும், 11.67 சதவீதம் கருணைத் தொகையாகவும் வழங்கப்படும். இதன் மூலம் 69 ஆயிரத்து 556 மின் வாரிய ஊழியர்கள் பயன் அடைவர்.

இதனால், மின் வாரியத்திற்கு இந்த ஆண்டு ரூ. 60 கோடியே 47 லட்சம் செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தொடர் நடவடிக்கை'
ஈழத் தமிழர் பிரச்சனையை கொச்சைப்படுத்தவில்லை: முதல்வர்
இலங்கை தமிழர் பிரச்சனை: கம்யூ.க்கு கருணாநிதி பதில்
இ‌ந்‌திய-இலங்கை கூ‌ட்டு நடவடி‌க்கை கூடாது: வைகோ
தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
தமிழகத்தில் இன்றும் மழை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...