யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தொடர் நடவடிக்கை'
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2008   ( 16:12 IST )
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி: லங்கைத் தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரத மேடையில், இலங்கை ராணுவத்தினால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் கொடுமை நின்றபாடில்லை என்பது பற்றியும் பேசப்பட்டுள்ளதே?

பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விரிவாக செய்திகளை வெளியிட்ட நாளேடுகளில், மற்றொரு செய்தியும் வந்துள்ளன. அந்தச் செய்திக்கான தலைப்பு `மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா, இலங்கை ஒப்புதல்' என்பதாகும்.

அந்தச் செய்தியில், `இந்திய மீனவர்கள் தொடர்ந்து பாக். நீரிணைப்பில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு திட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின்போது, இதற்கான தக்கதொரு வழிமுறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்' என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓர் ஆங்கில நாளேட்டில் இதுபற்றி வெளிவந்த செய்தியில், 'பாக். ஜலசந்தியில் இலங்கை ராணுவத்தினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறை குறித்து முடிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகிதா போக லோகாமாவை புதின்கிழமை அன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி அவர் பேசினார். இந்திய மீனவர் பிரச்சனை பற்றி தத்தம் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லையை தாண்டி வருவதாகக் குற்றம்சாட்டி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குறி வைத்து தாக்குவது குறித்து பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்,' என்று கூறப்பட்டுள்ளது.

நாமும் மத்திய அரசிடம் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தொடர்ந்து பல வழிகளில் வலியுறுத்திக் கொண்டுதான் வருகிறோம், என்று கருணாநிதி கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈழத் தமிழர் பிரச்சனையை கொச்சைப்படுத்தவில்லை: முதல்வர்
இலங்கை தமிழர் பிரச்சனை: கம்யூ.க்கு கருணாநிதி பதில்
இ‌ந்‌திய-இலங்கை கூ‌ட்டு நடவடி‌க்கை கூடாது: வைகோ
தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
தமிழகத்தில் இன்றும் மழை!
குமரி கடலில் ஹிதேந்திரன் அஸ்தி கரைப்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...