யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை தமிழர் பிரச்சனை: கம்யூ.க்கு கருணாநிதி பதில்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2008   ( 15:36 IST )
இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு இதுவரை தூங்கியது இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?

பதில்: தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பதுதான் ஆச்சரியத்தைத் தருகிறது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது தான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியிருக்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. இன்னும் சொல்லப் போனால், 23.4.2008 அன்று சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்தபோது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டுகள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக, அவர்கள் தூங்கிவிட்டதாக சொல்ல முடியுமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இ‌ந்‌திய-இலங்கை கூ‌ட்டு நடவடி‌க்கை கூடாது: வைகோ
தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
தமிழகத்தில் இன்றும் மழை!
குமரி கடலில் ஹிதேந்திரன் அஸ்தி கரைப்பு!
இலங்கை பிரச்சனை : காங்., திமுகவுக்கு திருமா வேண்டுகோள்
இலங்கை இனப் படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது: வைகோ
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...