|
| இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கை கூடாது: வைகோ |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2008 ( 15:36 IST ) | |
"தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியா மற்றும் இலங்கை அறிவித்துள்ள கூட்டு நடவடிக்கை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகிறது.
இதை திசை திருப்புவதற்காக, இலங்கை அரசு கடந்த இரு ஆண்டுகளாகவே தீட்டிய சதித்திட்டத்தில் தற்போது இந்திய அரசும் கைகோர்த்துள்ளது.
அதன்படி, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித் பொகல்லகாமா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் சந்திப்புக்கு பின்னர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இருநாடுகளின் கூட்டு நடவடிக்கை என்ற திட்டத்தை இருவரும் அறிவித்துள்ளனர்.
இந்திய அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த கூட்டு நடவடிக்கைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|