|
| தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
|
| சென்னை/ புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2008 ( 12:30 IST ) | |
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கனிமொழி எம்.பி., பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொடுத்தார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில், "பிரதமருடன் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து பேசினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|