|
| வார்டு இடைத்தேர்தல்: திமுக- அதிமுக மோதல்! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2008 ( 18:57 IST ) | |
சென்னை மாநகராட்சி 18 மற்றும் 44-வது வார்டில் இன்று நடந்த இடைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக மற்றும் அதிமுக கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மாநகராட்சியின் ராயபுரம் 18-வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர், புளியந்தோப்பு 44-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி ஆகிய இருவரும் மரணம் அடைந்ததையடுத்து இந்த வார்டுகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் 18-வது வார்டில் திமுக சார்பில் கிருஷ்ணன் மற்றும் அதிமுக சார்பில் சேகர் உள்பட 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதேபோல் 44-வது வார்டில் திமுக சார்பில் நடராஜன், அதிமுக சார்பில பிரதாப் குமர் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இத்தேர்தலின் போது திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவியது.இதனால் ஒருக்கட்டத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|