|
| சீர்திருத்தப்பள்ளியில் ஊழியர் கொலை: 6 பேர் ஓட்டம் |
| தஞ்சாவூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 9 செப்டம்பர் 2008 ( 10:28 IST ) | |
தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஊழியரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 6 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை தெற்கு காவல் நிலையம் எதிரே சிறுவர்களுக்கான அரசு சீர்திருத்தப்பள்ளி உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக் கைதிகள் உள்பட 149 கைதிகளும், வார்டன் உள்பட 52 பேரும் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள கைதிகளுக்கு பல்வேறு பணிகள் மற்றும் தொழில்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தோட்ட பராமரிப்பு பணிகளை செய்துவந்த முனுசாமி நேற்று 6 சிறுவர்களுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 6 சிறுவர்களும் சேர்ந்து திடீரென அவரை மண் வெட்டியால் வெட்டி, ஓர் மறைவிடத்தில் போட்டுவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பியோடினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும், சிறுவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல்வேட்டை நடத்தினர்.
அப்போது பஸ்சில் தப்பிச்சென்ற 2 சிறுவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் 4 சிறுவர்களை தேடி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|