|
| குன்னக்குடி: வாழ்க்கைக் குறிப்பு |
| 9 செப்டம்பர் 2008 ( 09:57 IST ) | |
குன்னக்குடி வைத்தியநாதன் கடந்த 1935ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர்.
இவரது தந்தை பெயர் ராமசாமி சாஸ்திரி. தாயார் மீனாட்சி.
சிறுவயதிலேயே வயலின் மேதையாக திகழ்ந்த கவைத்தியநாதன் 12 வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்குகொண்டார். பிரபலமான இசைக்கலைஞர்களின் குழுவில் இணைந்து நிகழ்ச்சிகள் செய்தார்.
கடந்த 1963ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்த அவர், 1969ம் ஆண்டு சொந்தமாக ஒரு படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்தார். 1970ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார்.
இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் சிறந்து விளங்கினார்.
இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார். இவர் பாடிய 'கொட்டாம்பட்டி ரோட்டிலே... குட்டிபோற சோக்கிலே' என்ற பாடல் பெரும் புகழ் பெற்றது.
'வயலின்' என்றாலே நினைவுக்கு வருவது குன்னக்குடி வைத்தியநாதன் என்ற அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்ற இவரது மறைவு, இசை உலகத்துக்கு மாபெரும் இழப்பு என்றால் மிகையில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|