யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் ரூ.4,150 கோடியில் அசோக் லேலண்டு-நிசான் தொழிற்சாலை
சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008   ( 18:31 IST )
தமிழகத்தில் அசோக் லேலண்டு மற்றும் நிசான் ஆகியவை இணைந்து ரூ.4,150 கோடியில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்கவுள்ளன.

இத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :

வாகன தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான அசோக் லேலண்டு சென்னைக்கு அருகில் எண்ணூரில் தொழிற்சாலையை அமைத்துள்ளது.மேலும் ஓசூர் மற்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 5 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

இந்நிறுவனம் ஜப்பானின் நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 1 லட்சத்து 90,000 வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. 3 கூட்டு திட்டங்கள் மூலம் இந்தத் தயாரிப்புப் பணியில் இரு நிறுவனங்களும் இறங்கவுள்ளன.

இது தவிர ஆண்டுக்கு 1 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கும் ஒரு திட்டத்தையும் அசோக் லேலண்டு செயல்படுத்தவுள்ளது.

இந்த வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் ரூ.4,150 கோடி முதலீட்டில் அமையவுள்ளன.

இதன் மூலம் 4,500 பேருக்கு நேரடியாகவும், ஏறத்தாழ 13,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இத்தொழிற்சாலை மூலம் கிடைக்கும் முதலீடு அசோக் லேலண்டு மற்றும் நிசான் நிறுவனங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த தொழிற்சாலைகளுக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, அசோக் லேலண்டு நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனமும் இந்தியாவின் ஹீரோ நிறுவனமும் இணைந்து சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில் வணிக வாகனங்கள் திட்டத்தை அமைத்து வருகின்றன.

இப்போது அசோக் லேலண்ட் மற்றும் நிசான் ஆகியவை இன்னொரு வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன.இவை அனைத்தும் சென்னைக்கு மேலும் மேலும் சிறப்புகளைச் சேர்க்கும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருவ‌ண்ணாமலை‌‌யி‌ல் 2 தலையுட‌ன் ‌பிற‌ந்த அ‌திசய பெ‌ண் குழ‌ந்தை
த‌மிழக‌ம் முழுவது‌ம் வழ‌‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ புற‌க்க‌ணி‌ப்பு
ஆ‌ற்காடு வீராசாமியை ‌பதவி விலக கோரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் : பா.ஜ.
மதுரையில் அதிமுகவினர் மறியல் : 1,000 பேர் கைது
என்எல்சி ஸ்டிரைக்: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
நடிகர் கடத்தல்: வீரப்பன் மனைவிக்கு குற்றபத்திரிக்கை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...