|
| திருவண்ணாமலையில் 2 தலையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை |
| திருவண்ணாமலை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 17:34 IST ) | |
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு 2 தலைகள், 4 கைகள், 4 கால்களுடன் அதிசய பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
இம்மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தாலுகா கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (28). இவர் பிரசவ வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து மகப்பேறு மருத்துவர்கள் குழு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர்.
இதையடுத்து அப்பெண்ணுக்கு 2 தலைகளுடன் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்தது. அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள் இருந்தது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், ஜீன் கோளாறு காரணமாக இது போன்று மிகவும் அதிசய சம்பவம் எப்போதாவது ஏற்படுவது ஒன்று என்றனர்.
இதற்கிடையே இச்செய்தியறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மருத்துவமனைக்கு வந்து இந்த அதிசய குழந்தையை பார்த்துவிட்டுச் சென்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|