|
| என்எல்சி ஸ்டிரைக்: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்! |
| நெய்வேலி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 12:33 IST ) | |
நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று முதல் மீண்டும் காலவரையற்றப் போராட்டம் துவங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கடந்த 4ம் தேதி நடந்த விபத்தில், ஊழியர் ஒருவர் பலியானார். அதற்கி இழப்பீடு வழங்குவது தொடர்பாக தொழிலாளர்கள் சங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில், அடிக்கடி நடைபெறும் விபத்துக்களுக்கு காப்பீடு அளிப்பது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டன.
இதுதொடர்பாக, ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும், என்.எல்.சி. நிர்வாகத்துக்கும் இடையே நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, இன்று காலை திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|