|
| நடிகர் கடத்தல்: வீரப்பன் மனைவிக்கு குற்றபத்திரிக்கை! |
| ஈரோடு (ஏஜென்சி), 8 செப்டம்பர் 2008 ( 12:17 IST ) | |
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில், சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 34 பேருக்கு சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை வழங்கியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி தொட்டகாஜனூரில், கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி சென்றான்.
இந்த சம்பவம் தொடர்பாக தாளவாடி போலீசார், வீரப்பன், அவரது மனைவி முத்துலட்சுமி உட்பட 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தன வீரப்பன் இறந்துவிட்ட நிலையில், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட அனைவருக்கும் சத்திய மங்கல்ம் நடுவர் நீதிமன்றம் 670 பக்க குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|