|
| சமூக நீதிக்காக இன்னும் போராடுவேன் : கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 11:17 IST ) | |
சமூக நீதிக்காக இன்னும் தொடர்ந்து தாம் போராடவுள்ளதாக, தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு 'சமூக நீதிக்கான வீரமணி விருது' நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் விருதையும், ரூ.1 லட்சம் காசோலையையும் பெற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி பேசுகையில், "இங்கே வீரமணி பேசும்போது இது விருதல்ல, போர்வாள் என்றார். ஆங்கிலத்தில் இந்த சொல்லை மாற்றிச் சொன்னால், இது அவார்டு அல்ல; ஸ்வார்டு. தகுதியானவர் பெயரால் தான் இந்த விருதை வாங்கியிருக்கிறேன்," என்றார்.
சுயமரியாதை, சமூக நீதியில் அக்கறையுள்ளவன் என்பதால் மட்டுமல்ல, இதற்காக தொடர்ந்து போராடுபவன் என்பதற்காக இந்த விருது வழங்கியிருப்பதை தாம் மறந்துவிடவில்லை என்ற அவர், "1920-ம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கிற சமூக நீதிக்கான போரை வேகப்படுத்தி பல வெற்றிகளை பெற்ற பெரியார், அண்ணா ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற எங்களுக்கும் இந்த உரிமை உண்டு," என்று கூறினார்.
மேலும், "சமூக நீதிக்கான இந்தப் போராட்டம் முற்றுப் பெற்றுவிட்டதா என்றால் இல்லை. இன்னும் போராடு என்று ஊக்கப்படுத்துகிற விதத்தில்தான் இந்த விருதை தந்திருக்கிறீர்கள்," என்றார் முதல்வர் கருணாநிதி.
டாக்டர் ராமசாமி தலைமை தாங்கிய இவ்விழாவில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், அமெரிக்க பேராசிரியர் பால்கர்ட்ஸ், சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|