யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விஜயன் கொலை வழக்கு : எம்.ஜி.ஆ‌‌ரி‌ன் வள‌ர்‌ப்பு மக‌ள் கைது
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008   ( 11:05 IST )
விஜயன் கொலை வழக்கில், எம்.ஜி.ஆரின் வள‌ர்‌ப்பு மக‌ள் உ‌ள்பட கூ‌லி‌ப்ப‌டை‌யின‌ர் 7 பேரையும் பிடித்து சி.பி.சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன் என்ற விஜயகுமார், கடந்த ஏ‌ப்ர‌‌ல் மாத‌ம் 4-‌‌ம் தே‌தி ம‌ர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இ‌ந்தக் கொலை தொட‌ர்பாக அவரது நண்பர் செந்தில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்தனர்.

இத‌னிடையே விஜயனின் மனைவி சுதா, சொத்து பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தினரே கூலிப்படையினரை ஏவி தனது கணவனை தீர்த்துக்கட்டியதாக புகார் கூறினார்.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் து‌ப்பு ‌கிடை‌‌க்காததா‌ல் சி.பி.சி.ஐ.டி. காவ‌ல்துறை‌க்கு வழ‌க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் தலைமை இய‌க்குன‌ர் (டி.ஜி.பி.) அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின்பேரில் கூடுதல் காவ‌ல்துறை க‌ண்கா‌‌ணி‌ப்பாள‌ர் ஷாஜகான் தலைமையிலான தனிப்படை‌யின‌ர் கடந்த 3 மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வ‌ந்தன‌ர்.

விஜயனின் மனைவி சுதாவின் சகோதரிகள் லதா, அவரது கணவர் ராஜேந்திரன், மகன் குமார் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. சுதாவின் சகோதரிகள் கீதா, பானுமதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 60 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்தனர்.

இந்த ‌விசாரணை‌யி‌ல் கொலையாளிகள் யாரென்று துப்பு துலங்கியது குறித்து சி.பி.சி.ஐ.டி. காவ‌ல்துறைய அ‌திகா‌ரி ஒருவ‌ர் கூறுகை‌யி‌ல், "கொலை செய்யப்பட்ட விஜயனின் மனைவியின் தங்கையான பானு என்ற பானுமதி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது," என்றார்.

சொத்து தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி இந்த கொலை நடந்துள்ளது என்ற அவர், "௦௦௦கூலிப்படையைச் சேர்ந்த 6 பேரும் பிடிபட்டுள்ளனர். இவர்களை ஏவிய முக்கிய புள்ளி ஒருவரும் கைது செய்யப்படுவார். முழுவிவரமும் இன்று வெளியிடப்படும்," என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரத்குமார் ஒரு பகுதி நேர அரசியல்வாதி : கருணாநிதி
திமுக பற்றி கவலை ஏன்?: ராமதாஸுக்கு கருணாநிதி கேள்வி
ராமதாஸின் புகார் கலப்படமற்ற க௦ற்பனை: முதல்வர் பதில்
இந்தியாவுக்கு வல்லரசு அங்கீகாரம்: மாதவன் நாயர்
கருணாநிதியுடன் புதுவை முதல்வர், அமைச்சர்கள் சந்திப்பு
மின்வெட்டு: கறுப்பு துணி கட்டி விஜயகாந்த் போராட்டம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...