|
| சரத்குமார் ஒரு பகுதி நேர அரசியல்வாதி : கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 10:30 IST ) | |
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், பகுதி நேர அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி: கேபிள் டி.வி. விஷயத்தில் காட்டும் அக்கறையை, மின் வெட்டு பிரச்சனையில் முதல்வர் காட்டட்டும் என்று நடிகர் ஒருவர் அறிக்கை விடுத்திருக்கிறாரே?
பதில்: மின் வெட்டு பிரச்சனை குறித்து ஒவ்வொரு நாளும் நான் எந்த அளவிற்கு அக்கறை காட்டி வருகிறேன் என்பதை பகுதி நேர அரசியல்வாதிகள் அறிய மாட்டார்கள்!
மாதக் கணக்கில் ஓய்வெடுப்பவர்களுக்கு துதி பாடும் எண்ணம் வந்து விட்டால், மற்றவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் கவனிக்க நேரம் இருக்காது தான்!
நான் ஏதோ குடும்பப் பிரச்சனையிலே கவனம் செலுத்துவதாக அவர் சொல்லியிருக்கிறார். குடும்பத்தை குப்பையிலே வீசிவிட்டும் போய் விடக் கூடாது. குடும்பத்திற்காகவே மற்றவர்களை புறம் தள்ளி விடவும் கூடாது என்பதை நான் அறிந்தவன்தான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|