|
| திமுக பற்றி கவலை ஏன்?: ராமதாஸுக்கு கருணாநிதி கேள்வி |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 10:21 IST ) | |
திமுக பற்றி ராமதாஸுக்கு கவலை ஏன் என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: தமிழகத்தில் தற்போது சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றால், தி.மு.க.விற்கு ஓர் இடம் கூடக் கிடைக்காதென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பதில்: திமுக கூட்டணியில்தான் பாமக இல்லையே, அப்படி இருக்கும்போது தி.மு.க.விற்கு ஓர் இடம் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? அதைப்பற்றி இவர் ஏன் கவலைப்படுகிறார்?
அது மாத்திரமல்ல, சட்டமன்றத் தேர்தல் ஒன்றும் தற்போது நடக்கப்போவதில்லையே! இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறதே!
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் பாமக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வரப் போகிறது என்று ஏற்கனவே இவரே சொல்லியிருக்கிறாரே? அவரே வரட்டும், தமிழகத்தை ஆளட்டும் என்று நாம் அப்போதே இரண்டு மூன்று முறை பெருந்தன்மையாகச் சொல்லியிருக்கிறோமே!
அதே பெருந்தன்மையோடு (?) தான் அவரும் நாம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று சொல்லியிருக்கிறார் போலும்!
"எண்ணங்கள் குதிரைகளானால், எண்ணிய நேரத்தில் காத தூரம் பறக்கலாம்'' என்று பேரறிஞர் அண்ணா சொன்ன பொன்மொழி தான் எனக்கு நினைவிலே வருகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|