யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராமதாஸின் புகார் கலப்படமற்ற க௦ற்பனை: முதல்வர் பதில்
சென்னை (ஏஜென்சி), 8 செப்டம்பர் 2008   ( 10:12 IST )
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி வாங்குவதில் ஊழல் என்ற டாக்டர் ராமதாஸின் புகார், கலப்படமற்ற கற்பனை என்று முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் வாரியத்தின் நான்கு அனல் மின் நிலையங்களின் (2,970 மெகாவாட்) ஓராண்டு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் அளவு சுமார் 15 மில்லியன் டன்கள் ஆகும்.

இந்த நிலக்கரியை - நிலக்கரி இணைப்பு நிலைக்குழுவின் ஒதுக்கீடு ஆணையின்படி இந்திய நிலக்கரி நிறுவனம் வழங்க வேண்டும். இந்திய நிலக்கரி நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும் நிலக்கரியின் விலையை இந்திய நிலக்கரி நிறுவனம்- மத்திய அரசு அவ்வப்போது நிர்ணயம் செய்கிறது. அந்த விலையில்தான் எல்லா மின் உற்பத்தி நிறுவனங்களும் கொள்முதல் செய்ய முடியும்.

இந்திய நிலக்கரி நிறுவனம் 2003-ம் ஆண்டு வரை தேவையான நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், இதர மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் வழங்கி வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு மத்திய மின் அமைச்சகம் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி குறைவாக இருக்கும் என கணித்து மின்சார வாரியங்களையும், இதர மின் உற்பத்தி நிறுவனங்களையும் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியின் இலக்கு ஆண்டுக்கு 1.56 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 2005-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம், தேவையான நிலக்கரியை மத்திய பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலம் இறக்குமதி செய்து வருகிறது. 2004-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக இந்திய நிலக்கரி நிறுவனம் வழங்கிய நிலக்கரியின் அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது. அதன் அடிப்படையில் 2004-2005-ம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விவரம் ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

2004-2005 - 1.22 லட்சம் டன்கள், 2005-2006 - 11.08 லட்சம் டன்கள், 2006-2007 - 10.83 லட்சம் டன்கள், 2007-2008 - 18.06 லட்சம் டன்கள், 2008-2009 (ஆகஸ்டு 2008 வரை) 11.58 லட்சம் டன்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. மத்திய நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலமாகத் தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை நிர்ணயம் செய்யும்போது அன்றைய சந்தை விலையையும், அதே சமயத்தில் மற்ற நிறுவனங்கள் வாங்கிய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து குறைவான விலையையே நிர்ணயம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலக்கரியின் விலை மற்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த விலையோடும் வெளிச் சந்தை விலையோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவாகவே இருக்கிறது.

எம்.எம்.டி.சி. மூலமாக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் எம்.எம்.டி.சி. மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதலுடன் உலக அளவில் சான்றிதழ் பெற்ற நிறுவனம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மின்வாரியம் நிர்ணயித்துள்ள தரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு மட்டுமே பணம் வழங்கப்படுகிறது. எனவே நிலக்கரி வாங்குவதில் ஊழல் என்ற புகார் கலப்படமற்ற கற்பனையாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு மின்சார வாரியம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதாகவும், அதிலே ஏதோ ஊழல் நடைபெறுகிறது. இதுகுறித்து உயர்நீதி மன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென்றும் விசாரணையின் போது தேவையான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திமுக பற்றி கவலை ஏன்?: ராமதாஸுக்கு கருணாநிதி கேள்வி
இந்தியாவுக்கு வல்லரசு அங்கீகாரம்: மாதவன் நாயர்
கருணாநிதியுடன் புதுவை முதல்வர், அமைச்சர்கள் சந்திப்பு
மின்வெட்டு: கறுப்பு துணி கட்டி விஜயகாந்த் போராட்டம்!
போலீசார் நடவடிக்கை: சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடல்!
என்எல்சி தொழிலாளர்கள்: நாளை மீண்டும் ஸ்டிரைக்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...