|
| இந்தியாவுக்கு வல்லரசு அங்கீகாரம்: மாதவன் நாயர் |
| சென்னை (ஏஜென்சி), 7 செப்டம்பர் 2008 ( 17:49 IST ) | |
"அணு வர்த்தகத்தில் ஈடுபட என்.எஸ்.ஜி நாடுகள் அனுமதி வழங்கியிருப்பதன் மூலம், உலகின் முக்கியமான அணு வல்லரசாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பில் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு இன்று கவுரவ டாக்டர் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி முன்மொழியப்பட்ட தீர்மான வரைவுக்கு, அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இதன் மூலம் உலகின் முக்கியமான அணு வல்லரசாக நம்மை என்.எஸ்.ஜி. அங்கீகரித்துள்ளது. உலகளவில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் இது.
அணு தொழில்நுட்பத்தை இந்தியா மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த அனுமதி நமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|