|
| கருணாநிதியுடன் புதுவை முதல்வர், அமைச்சர்கள் சந்திப்பு |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008 ( 17:32 IST ) | |
புதுவை முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினர்.
கடந்த வாரம் புதுவை மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற வைத்திலிங்கம் இன்று காலை முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் மந்திரிகள் வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோரும் வந்திருந்தனர்.
சுமார் மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் ஆதரவு எங்களுக்கு தேவை. அதற்காகத்தான் முதல்வர் கருணாநிதியை சந்தித்தேன். அவரும் எங்களுக்கு முழு ஆதரவு தருவதாக கருணாநிதி வாக்குறுதி அளித்தார்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் எங்களுடன் சமாதானமாக இருக்கிறார். இப்போது எங்களுக்குள் பிரச்சனை இல்லை. சுமூகமாக இருக்கிறோம்.
உள்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக கட்சியின் மேலிட பார்வையாளர் அடுத்தவாரம் புதுவை வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|