|
| மின்வெட்டு: கறுப்பு துணி கட்டி விஜயகாந்த் போராட்டம்! |
| கோவை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008 ( 17:23 IST ) | |
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து கண்ணில் கறுப்புத் துணிகட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து விஜயகாந்த் தலைமையில் தேமுதிக சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்ணில் கறுப்பு துணி கட்டி, கையில் சிம்னி விளக்கு ஏந்தி விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். அப்போது விஜயகாந்த் பேசுகையில், "தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுக்கு மின்சாரப் பற்றாக்குறையே காரணம். போதிய மின்சார உற்பத்திக்கு தேவையான நடவடிக்கைகளை திமுக மற்றும் அதிமுக அரசுகள் எடுக்கவில்லை. தேவைப்பட்டால் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவோம்" என்றார்.
இதில் நூற்றுக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டி, கைகளில் சிம்னி விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|