யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
போலீசார் நடவடிக்கை: சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடல்!
ரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து தொடர்பாக, கடை உரிமையாளர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இன்று காலை மூடப்பட்டன.

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் கடந்தவாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஊழியர்கள் பலியானார்கள். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கடை மானேஜர் செல்வம், சூப்பர்வைசர் ஜெபசிங் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் மற்றும் சண்முகதுரை ஆகிய 3 பேரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக, தூத்துக்குடி மாவட்டம் பணிக்கநாடார் குடியிருப்பு மற்றும் மதுரை ஆகிய ஊர்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. கடைக்கு சென்ற போலீசார், கடை உரிமையாளர்கள் உள்ளே பதுங்கியிருக்கலாம் என நினைத்து சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்யும் வரை கடைகளை திறக்கக் கூடாது என்று கூறினர்.

இதையடுத்து, சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை, ஜவுளிக்கடை, மேம்பாலம் கீழே உள்ள சரவணா ஸ்டோர் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. எனினும், மதியத்துக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவுக்கு வல்லரசு அங்கீகாரம்: மாதவன் நாயர்
கருணாநிதியுடன் புதுவை முதல்வர், அமைச்சர்கள் சந்திப்பு
மின்வெட்டு: கறுப்பு துணி கட்டி விஜயகாந்த் போராட்டம்!
என்எல்சி தொழிலாளர்கள்: நாளை மீண்டும் ஸ்டிரைக்
தமிழக மீனவர் பிரச்னை: ‌பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்
கம்யூனிஸ்டுகளுக்கு ஜெ.தூண்டில் : கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...