|
| தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
|
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008 ( 15:29 IST ) | |
"தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்" என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதம் :
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது குறித்தும் தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்களுக்கு பலமுறை நான் கடிதம் எழுதியிருப்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உங்களிடம் நேரிலும் தெரிவித்திருக்கிறேன்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்ட பிறகும் அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவே அச்சப்படுகிறார்கள்.
இந்திய கடல் எல்லைக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசு தாக்குதல் நடத்தியதை மறுத்து வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 27 முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் 24 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 342 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சமீபத்தில் இலங்கையில் நடந்த சார்க் மாநாட்டிலும் இலங்கை அதிபரிடம் நீங்கள் எடுத்துக் கூறினீர்கள்.
ஆனால் அந்த மாநாடு நடந்த பிறகும்கூட கடந்த மாதம் 9ம் தேதி 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். கடந்த 4ம் அன்று நாகை மீனவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார்.
இந்த தாக்குதல் குறித்து சென்னையில் உள்ள இலங்கை தூதர் அலுவலகத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்தது. இந்திய அரசும் இலங்கை அரசிடம் தெரிவித்தது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
எந்த முன்னறிவிப்பும் இன்றி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி தமிழக மீனவர்கள் உயிரை பறிப்பது சர்வதேச கடல் விதிகளை மீறும் செயலாகும்.
எனவே, இந்த பிரச்சனையில் தலையிட்டு, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தும்படி அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|