|
| கம்யூனிஸ்டுகளுக்கு ஜெ.தூண்டில் : கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), 6 செப்டம்பர் 2008 ( 18:38 IST ) | |
பிரதமரை பதவி விலகக் கோருவதன் மூலம் கம்யூனிஸ்டுகளுக்கு ஜெயலலிதா தூண்டில் போட முனைகிறாரா? என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கேள்வி :- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பகத்தன்மையை பிரதமர் இழந்து விட்டதாகவும், அவர் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டு மென்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில் :- பதவியிலே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றைச் சொல்லி, அவர்கள் எல்லாம் பதவி விலகி விட வேண்டும், ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்.
தமிழகத்திலே தான் இப்படி எதற்கெடுத்தாலும் ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஒவ்வொரு அமைச்சராகப்பதவி விலக வேண்டு மென்று சொல்லிக் கொண்டி ருந்தார். இப்போது பிரதமர் அளவிற்கு முன்னேறியிருக்கிறார்.
இவர் தோழமை கொள்ள முயன்ற பா.ஜ.க. மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லையென்றால் கம்யூனிஸ்ட்களுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது.இந்த நிலையில் தான் ஜெயலலிதா பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்.
கேள்வி :- அரசாங்கத்தின் "எல்காட்" நிறுவனத்திற்கு அதிகாரி இல்லாம தவிச்சிக் கிட்டிருக்கிறதா நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே?
பதில்:- "எல்காட்'' நிறுவனத்தைப்பற்றியும், அதன் அதிகாரிகளைப் பற்றியும் தொடர்ந்து பல செய்திகள் நாளேடுகளிலும், வார இதழ்களிலும் வந்து கொண்டிருப்பதை நானறிவேன்.அது எப்படி யாரால் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் அறிவேன்.
அங்கே பணியாற்றிய அதிகாரி மாற்றப்பட்டு வேறு அதிகாரியை நியமனம் செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும்,அந்த அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பதால்,அவருடைய நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தான் பணியிலே சேர வேண்டும்.
அவ்வாறு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலும் வந்து, அந்த அதிகாரியின் நியமன ஆணையும் இன்றையதினம் ஏடுகளிலே வெளி வந்துள்ளது.அதனைத் தெரிந்து கொள்ளாமல் விபரமும் புரியாமல் ஏடுகளில் ஏதேதோ செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
கேள்வி :- பல்கலைக்கழக விழாவிலே பேசிய பிரதமர் தமிழகத்தில் பெண் கல்வியின் முன்னேற்றம் பற்றி பேசியிருக்கிறாரே?
பதில்:- பெண் குழந்தை கள் மற்றும் பெண்கள் கல்வி பெறுவதில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென்று பேசிய பிரதமர், கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்ததில் தமிழ்நாடு முன் உதாரணமாகத் திகழ்கிறது என்றும், இந்தியாவின் இதரமாநிலங்களும் தமிழ் நாட்டைப்பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் பேசினார்.பெண் கல்விக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டுமென்று முதன் முதலாகச் சட்டம் கொண்டு வந்ததே தமிழ்நாடு தானே!
பிரதமர் மட்டுமல்ல, ஐக்கிய முன்னணியின் வழிகாட்டும் குழுவின் தலைவர் தியாகத்திருவிளக்கு அம்மையார் சோனியாகாந்தி யார் பேசும்போது கூட, தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும், நாட்டில் கல்வி அறிவு விகிதத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும், சமூகப்புரட்சி ஏற்படுத்த விரும்பும் மாநிலங்கள் கல்வித் துறையில் தமிழகத்தைப்பின்பற்ற வேண்டும் என்றும் பேசினார். தமிழகத்தைப் பாராட்டிப் பேசி இரு பெரும் தலைவர்களுக்கும் தமிழகத்தின் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி :- தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க 600 மெகா வாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதே?
பதில்:-மின் வெட்டு தமிழகத்திலே மட்டுமில்லை.எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றது. அதனைச் சரிக்கட்டவும், சமாளிக்க வும் தினந்தோறும் அதிகாரி களை அழைத்து விவாதிக் கின்றோம். அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி அங்கேயும் முடிந்த அள விற்கு மின்சாரத்தைப் பெற முயற்சிக்கின்றோம். மக்களுக்கு மின்வெட்டு காரணமாக எந்த அளவிற்கு சிரமங்களைக் குறைக்க வேண்டுமோ, அதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். அதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் தான் புரிந்தும் புரியாமல் அரசை குறை கூறுகிறார்கள்.
கேள்வி :- பெண் ஒருவரே பூசாரியாக பணி யாற்றலாம் என்று உயர் நீதி மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறதே?
பதில்:- வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு அது. மதுரை உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னத் தேவர் என்பவரின் மகள் தன் தந்தையார் கோவில் பூசாரி யாக பணியாற்றியதாகவும், அவரது மறைவுக்குப் பிறகு தான் அந்தப்பணியை ஆற்ற மற்றவர்கள் தடுப்பதாகவும் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள் சட்டங்களிலும், பூசாரி களுக்கான விதிகளிலும் பெண்கள் பூஜை செய்வதைத் தடுக்க எதுவும் இல்லை. இந்த மனுதாரர் தொடர்ந்து பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு கூறியிருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|