யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையில் பிரவுசிங் சென்டருக்கு உ‌ரிம‌‌க் கட்டணம்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 18:30 IST )
செ‌ன்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரவுசிங் சென்டர் மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்டவற்றுக்கு உ‌ரிம‌‌க் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை‌‌யி‌ல்,"சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை, பிரவுசிங் சென்டர், நோட்டு மற்றும் புத்தக விற்பனை கடை, இருச‌க்கர வாகன‌ம் ‌விற்பனை மையம்,

செருப்புக்கடை, செ‌ல்பே‌சி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை, தேங்காய், பழங்கள் விற்பனை கடை, அடகுக்கடை, கட்டிட இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை, ‌‌மி‌திவ‌ண்டி மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை, எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை விற்பனை கடை, பேன்ஸி ஸ்டோர், ரெடிமேட் ஆடை விற்பனை கடை ஆகியவற்றில் உரிமக் கட்டணம் (லைசென்ஸ்) வசூலிக்கப்படும்.

பாத்திரக்கடை, கண் கண்ணாடி கடை, ஆட்டோ மொபைல் உதிரிபாக கடை, மின் மோட்டார் விற்பனை கடை, விளையாட்டு சாதன கடை, வாட்ச் உதிரிபாகம் மற்றும் விற்பனை கடை, தொலை‌க்கா‌ட்‌சி, டி.வி.டி. ப்ளேயர், ஆடியோ சானங்கள் விற்பனை கடை, ஆடியோ, சிடி கடை, பஞ்சு மெத்தை, தலையணை விற்பனை கடை, திருமண பத்திரிகை, வாழ்த்து அட்டை கடை ஆகியவற்றிலும் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் மின்தடை அமலாகும் நேரம் மாற்றம்
அண்ணா நூற்றாண்டு விழா :ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
செப்.15 முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் அரசு கே‌பி‌ள் டி.‌வி. சேவை
தமிழக காவல்துறை 150 : கருணாநிதி வாழ்த்து
விலைவாசியை கட்டுப்படுத்துவதால் வளர்ச்சி பாதிக்காது: பிரதமர்
சேலம் உருக்காலையால் கூடுதல் வேலைவாய்ப்பு : மன்மோகன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...