யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையில் மின்தடை அமலாகும் நேரம் மாற்றம்
சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 18:23 IST )
செ‌ன்னை‌யி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்தடை அமலாகும் நேர‌த்தை மிழ்நாடு மின்சார வாரியம் மா‌ற்‌றி அமை‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக வெளியிட‌ப்ப‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல் கூறப்பட்டிருப்பதாவது :

தரமணி, துரைப்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் மாத்தூ‌த்‌தி‌ல் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரையாக இருந்து வந்த மின்தடை, இனி காலை 8 முதல் 10 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

புழ‌லி‌ல் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை இருந்த வந்த மின் தடை, இனி காலை 10 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

அய்யப்பாக்கம், காலடிப்பேட்டை‌யி‌ல் மாலை 4 முதல் 6 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 10 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ஒருபகு‌தி‌யி‌ல் மாலை 4.30 முதல் 6 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா நக‌ரி‌ல் காலை 6 முதல் 7.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்க‌த்த‌ி‌ல் காலை 6 முதல் 7.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

பாடி‌யி‌ல் மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி மாலை 4.30 முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

திருமங்கல‌த்‌தி‌ல் மாலை 4.30 முதல் 6 மணி வரையாக இருந்த மின்தடை, மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

நொளம்பூ‌ரி‌ல் காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 7 மணி வரையும் இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், டி.ஜி.நகர் மற்றும் மடுவங்கரை‌யி‌ல் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இருந்த மின் வெட்டு, இரவு 7 மணி முதல் 8 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அண்ணா நூற்றாண்டு விழா :ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
செப்.15 முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் அரசு கே‌பி‌ள் டி.‌வி. சேவை
தமிழக காவல்துறை 150 : கருணாநிதி வாழ்த்து
விலைவாசியை கட்டுப்படுத்துவதால் வளர்ச்சி பாதிக்காது: பிரதமர்
சேலம் உருக்காலையால் கூடுதல் வேலைவாய்ப்பு : மன்மோகன்
'ஆசிரியர் பணியே தெய்வீகத் தொழில்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...